கல்வி உருமாற்றம்
அனைவருக்கும் வணக்கம்
VGENIUST பயிற்சியில் 2017-இல் கலந்து கொண்டு அபார வெற்றி பெற்ற மாணவர்களின் பெற்றோரும் ஆசிரியருமான நான் எனது அனுபவங்களையும் என் சிந்தனையின் வெளிப்பாடுகளையும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். VGENIUST பயிற்சி என்றால் என்ன ? அதில் அப்படி என்ன சிறப்புகள் இருக்கின்றன என்று கேட்கிறீர்களா? தொடர்ந்து கேளுங்கள.
நம் பழந்தமிழர்களின் அதீத நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு மறைத் தமிழரால் இப்பயிற்சி வழங்கப்பட்டது, இன்றும் பல தரப்பட்ட மனிதர்களுக்கு தேவையறிந்து பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது பெருமைக்குரியது. அந்த வகையில் பயிற்றுனர் திரு இளங்கோவன் தங்கவேலு ஐயா அவர்களுக்கும் அவரது அன்பு பெற்றோர்களான திரு & திருமதி தங்கவேலு தெவானை தம்பதியனருக்கும், இப்பயிற்சியின் மூலம் பயன் பெற்ற அனைவரது சார்பிலும் உளமன உணர்வுடன் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி! நன்றி! நன்றி!
மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் ஆம்பித்து ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன . பல பரிணாம வளர்ச்சிகள் பெற்ற இக்கால கட்டத்திலும் சில பயிற்சிகள் மூலம் சிலர் நன்மைகள் அடைவது எங்களுக்கும் தெரியும். அப்பயிற்சிகள் அனைத்தும் மிகவும் அடிப்படையானவை. நாடு தழுவிய அளவில் வழங்கப்படும் பல பயிற்சிகளின் தரம் 10% விழுக்காடு கூட ஒப்பிட முடியாத நிலையில் இருக்கிறது. எடுத்துக்காட்டாக MITRA போன்ற நிறுவனங்கள் வழங்கி வரும் பயிற்சிகள் கூட அடிப்படையானதாகத்தான் இருக்கிறன என்றால் மறுப்பார் மறைப்பார் இல்லை. இன்றைய காலக்கட்டத்தில் விஸ்வரூபம் எடுத்து வரும் சவால்களை எதிர்க்கொள்வதற்கும் எதிர்காலத்தில் உருமாற்றம் பெற்று வரவிருக்கும் சவால்களை எதிர்நோக்குவதற்கும் இன்றைய தலைமுறையினருக்கு இது போன்ற அடிப்படையான பயிற்சிகள் எதற்கு? நுனிப்புல் மேய்வதற்கான திறன்களைப் பயிற்று வைப்பதன் நோக்கம்தான் என்ன?
பயிற்சியின் பங்கேற்பாளர்களான மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யுமளவிற்குப் பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படியா நடக்கிறது? ஒரு தனிநபரால் / ஒரு குழுவினரால் வடிவமைக்கப்பட்ட பயிற்சியில் கலந்து கொள்வதற்காக மாணவர்கள் அழைக்கப்படுகின்றனர். பல வேலைகளில் மாணவர்கள் தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொண்டு விபரங்களை உள்வாங்குவதற்கு முன்னே பயிற்சிகள் முடிவடைந்து விடுவதும் உண்டு. அதிகமான பயிற்சிகளின் வாயிலாகப் பயனடைந்தவர்கள் ஏற்பாட்டுக் குழுவினரே. அதாவது, ஒரு கண்துடைப்பிற்காக மாணவர்களுக்கு ஏதாவது நடவடிக்கைகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் கோரிக்ககையை நிறைவு செய்ய வேண்டும் என்பதற்தாகவே ஒரு சில நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அதற்கு ஆதாரமாக நிகழ்ச்சிக் குறிப்பு, செலவினங்கள் குறிப்பு, அறிக்கைகள், புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. ஆனால், 30% பயிற்சிகள் மாணவர்கள் நலத்தைக் கருத்தில் கொண்டே நடத்தப்படுகின்றன என்று திட்டவட்டமாகக் கூறலாம். அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுகள். இவர்களைப் போன்ற நல்லுள்ளங்கள் பூமியில் வாழ்வதால்தான் இன்னும் மழைப் பெய்து கொண்டிருக்கின்றது. எது எப்படி இருப்பினும், இனம் புரியாத பசியில் தத்தளிக்கும் மாணவர்களின் வயிற்றை நிறைக்க வேண்டிய உணவு, அதனை ஏற்பாடு செய்த ஏற்பாட்டளர்களின் வயிற்றையே வாந்தி எடுக்கும் வரையில் நிறைத்து வருகிறது. இதனால் யாருக்கு என்ன பயன்? தயவு செய்து சொந்த செலவில் சூனியம் வைக்கும் பற்றற்ற சமுதாயமாக மாறிவிடாதீர்கள். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரத்தை விழுந்து……….. விழுந்து…..செய்தது போதும். நமது கண்களே நமது வழிகாட்டி. உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள். இயற்கையாக அறிவுக் கண்களும் திறக்கும்.
உலகம் போற்றும் பெருமைக்குரிய இனம் தமிழினம். இக்கூற்றைப் புலப்படுத்துவதற்கு எந்த ஆதாரத்தையும் முன்வைக்கத் தேவையில்லை. உறங்கினால் எழுப்பிவிடலாம். ஆனால், உறங்குவதுபோல் நடிப்பவர்களை எப்படி எழுப்புவது? அப்படி எழுப்பிவிட்டால் மட்டும் உடனே எழுந்து விடுவார்களா என்ன….! எது எப்படி இருப்பினும் இந்நாட்டில் நமது நிலையை நன்கறிந்து கொண்டு விளிப்புணர்வுடன் இருக்கும் அறிவார்ந்த சமூகமே………..
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வியில் மிகக் குறைந்த விலையில் மிக உயர்ந்த நிலையை அடைவது என்பது குதிரைக் கொம்பாக இருக்கும் இக்காலக்கட்டத்தில் நாடுதழுவிய நிலையில் பல மாணவர்கள் பங்கு பெற்று வரும் அடிப்படையான பயிற்சிகள் எப்படிப்பட்ட உருமாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? வழங்கப்படும் பயிற்சிகளை ஆய்வு செய்த அனுபவம் உண்டா? அல்லது வழங்கப்பட்ட பயிற்சிக்குப் பின் தொடர் கண்காணிப்பு வழங்கப்பட்டுள்ளதா? இனிமேலாவது அதைச் செய்யுங்கள்! பயிற்சியில் வழங்கப்படும் கருத்துகளில் உள்ள உண்மைகளை……. அறிவியல் உண்மைகளைச் சற்று ஆராய்ந்து பாருங்கள்.
உங்கள் குழந்தைகள் கலந்து கொண்டு பெருமளவில் பயன் பெற்றதாக நினத்து மணற்கோட்டை கட்டிக்கொண்டிருக்கும் எனதருமை பெற்றோர்களே! உங்களுக்கு ஒரு நற்செய்தி. நீங்கள் பார்த்த பயிற்சிகளுக்கெல்லாம் தாய் பயிற்சியாக விளங்குவதுதான் VGENIUST பயிற்சி என்று ஆணித்தரமாக இடித்துரைக்கலாம். இதன் தலைமை பயிற்றுனரான ஐயா இளங்கோவன் தங்கவேலு அவர்கள் ஒரு தலைசிறந்த குருவும் பயிற்றுனரும் ஆவார்.
Listening to WISE PERSON’s Pure Scientific Advices, The Community Will Success 100%
தெளிந்த நிலையில் பரிபூரண விஞ்ஞான யுக்திகளை வழங்கும் நபரைப் போற்ற வேண்டும். சமூகம் 100% அய்யுக்திகளைப் பயன்படுத்தி உடனடியாக சாதனை செய்யலாம்.
நம்பிக்கையான தலைவர்கள் ஆட்சிப்புரியும் நாடு நம் மலேசிய திருநாடு. குறிப்பிட்ட பதவியில் இருப்பவர்கள் எடுக்கும் முடிவில்தான் பல தனிநபர்களின் எதிர்காலமே அடங்கி இருக்கிறது எனலாம். பதவில் இருப்பவர்கள்தான் மானியத்தையும் நேரத்தையும் நிர்ணயம் செய்கிறார்கள். இவர்கள், மக்களின் புதிய வளர்ச்சிக்காக அவர்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க புதுமையான நுண்ணியமான எளிமையான முறையில் அமல்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்துள்ளனரா? இதற்கு ஆதாரம் தேவையில்லை. ஒவ்வொரு நாளும் செய்தித்தாளில் வெளியேறும் செய்திகளே போதுமானது. உதாரணமாக, மாணவர்களுக்காக வரையறுக்கப்படும் பள்ளிப் பாடத்திட்டங்களும் அதனை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் தரமும் ஒரே சீராக இருக்கின்றதா? பிறகு, எப்படி நம் மலேசிய திருநாட்டின் கல்வி அமைச்சின் தேசிய கல்வி கொள்கையின்படி சீரான மாணவர்களை உருவாக்க முடியும்?
இறைவனின் படைப்பில் ஐந்து விரல்களும் சீராகவா இருக்கிறன? என்ற சின்னப்பிள்ளை தனமான கேள்விகளைத் தொடுத்து முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்துவிட நினைக்காதீர்கள். கல்வித்துறையிலும் விளையாட்டுத்துறையிலும் சாதனைப் படைத்துச் சிறந்து விளங்கும் பின்லாந்து, ஜப்பான், ரஷ்யா, ஜெர்மனி, சுவீடன், சுவிட்சலந்து, சிங்கப்பூர் போன்ற இன்னும் பல நாடுகள் வெற்றி வளம் வந்து கொண்டுதான் இருக்கின்றன. சரியானவற்றைச் செயல்படுத்துவதற்குச் சரியான குருவைக் கொண்டிருக்க வேண்டும். அல்லது, சரியாக முடிவெடுக்கும் ஆற்றலையாவது கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில் சரியானவற்றைப் பின்பற்றி செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். இவற்றில் ஒன்றினைச் செய்யத்தவறினாலும் பாதகம் விளைவதைத் தவிர்க்க முடியாது. இதைத்
திருமந்திரத்தில் திருமூலரால் இப்படிப் பாடப்பட்டுள்ளது
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடுங் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடும் குழிவிழு மாறே
அதாவது, அறியாமையை அறிவனால் போக்கும் குருவினைக் கொள்ள மாட்டார். அறியாமையை நீக்காத குருவினைக் கொள்வர். அது குருடனும் குருடனும் சேர்ந்து குருட்டுத் தனமாக ஆடி இரு குருடர்களும் அறியாமையால் குழியில் விழுவது போலாகும். ஞானமில்லாத குரு ஞானத்தை உபதேசிப்பது ஒரு குருடன் மற்றொரு குருடனுக்கு வழிகாட்டுவது போலாகும். இதில் இருவரும் கெடுவர். ஆகவே, உன்னதமான நிலையை அடைவதற்கு உன்னதமான குருவை, ஆசிரியரை, ஆட்சியாளரை, பயிற்றுனரை, தலைவரை, வழிகாட்டியைக் கொண்டிருப்பது மிக அவசியம். சிந்தனைக்கேற்ப உருமாற்றம் செய்யும் வல்லமையைப் பெறுவோம். இதுவே சத்தியம்.
நமக்குக் கால மாற்றத்திற்கு ஏற்ப புதிய தூரநோக்குத் திட்டம் உள்ளது. நாம் அடைவதற்கான புதிய நோக்கமும் இலக்கும் உள்ளது.
ஒரு தலைச்சிறந்த கல்வி கற்ற சமுதாயமாக விளங்க இலக்கும் எதிர்பார்ப்பும் கொண்டிருப்பது அவசியம். ஒட்டுமொத்த மானியத்தைப் பயன்படுத்தக்கூடிய விதம், பங்கீட்டின் சதவீதம் தொடர்பாக அரசு சார்பற்ற நிறுவனங்கள் எந்தவிதமான சேவையை யாருக்கெல்லாம் வழங்க வேண்டும் என்று சரியாக முடிவு செய்ய வேண்டும். உதாரணமாக, மாணவர்கள் சிறப்பாக கற்க வேண்டும் என்ற எண்ணத்தில்தானே கற்றுக் கொடுக்கிறோம்?
எனவே, புதிய அமலாக்கம், புதிய உத்திகள், புதிய செயல்முறைகள், புதிய செயல்திட்டங்களைச் செய்யும் இந்தியர்களின் உருமாற்றத்திற்காக அரசாங்கம் ஒதுக்கீடு செய்யும் ஒரு பெரு அலவிளான மானியத்தை யாருக்கு? எவ்வளவு? கொடுக்க வேண்டும் என்ற பணியைச் செய்யும் பொறுப்பு உயர் பதவியில் இருப்பவர்களுக்கும் அரசு சார்பற்ற ஒரு சில இயக்கங்களுக்கும் மட்டுமே உண்டு. மாணவர்கள், பங்குதாரர்கள் உட்பட முழுமையான கருத்துகளைச் செவிமடுக்கவும், நடைமுறைப்படுத்தவும் உயர் அதிகாரிகள் பொறுப்போடு நேரத்தை ஒதுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்! உருமாற்றத்தின் தாக்கங்கள் மற்றும் உருமாற்றங்களின் உண்மையான புள்ளிவிவரங்களையொட்டி முடிவெடுக்கும் உயர்மட்ட அதிகாரிகளான நீங்கள் சமூக நிலை குறித்து மகிழ்ச்சியடைகிறீர்களா? இது தற்போது தேசிய அளவில் பேசப்படும் செய்தியாகிவிட்டது. இந்தக் கேள்விக்கு உங்கள் பாணியில் பதில் சொல்லி விடுவீர்கள். ஆனால், உங்களின் பதில் நாட்டில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தற்போதைய சர்ச்சையை/செய்தியைச் சரி செய்யும் அளவிற்கு இருக்கிறதா?
நான் உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கும் VGENIUST பயிற்சியின் சிறப்புகளை தொடர்ந்து விளக்கிக் கொண்டே போகலாம் .VGENIUST பயிற்சியில் மனிதர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, இயற்கையான மூளையின் செயல்பாடு, ஆரோக்கியமான இயற்கை உணவு, உண்ணும் முறை (chew the water, drink the food ) மனிதனின் இயற்கையான வளர்ச்சியைத் தடை செய்யும் தவறான உணவு முறை, சாத்விக் உணவு முறை, விரதம், எண்ணைக் குளியல், மீள்பார்வை செய்யும் முறை, முழுமையாகவும் துல்லிதமாகவும் தேர்வுக்குத் தயாராகுதல், உடலுக்குத் தேவையான பயிற்சி/ஓய்வு, உடலுக்குத் தேவையான சக்தி, நினைவாற்றல் போன்ற இன்னும் பல அற்புதமான பல நடவடிக்கைகளுக்கு ஆதாரப்பூர்வமான விளக்கம் அளிக்கப்படுகிறது.
மூன்று அல்லது அதற்கும் மேலாக பல வேளை உணவை அன்பு பாசம் என்ற பெயரில் வாரி வழங்கும் பெற்றோர்களே! உடலுக்குள் செல்லும் உணவைக் கழிவாக வெளியேற்றும் சரியான முறையைக் கற்றுக் கொடுத்ததுண்டா? கற்றுக் கொடுப்பதற்கு எல்லா வீட்டிலும் பள்ளியிலும் சரியான கழிப்பறை உண்டா? பல மாணவர்கள் பள்ளியின் கழிவறையையே பயன்படுத்தியதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? பள்ளியின் அலுவலகத்தையும் சுற்றுச்சூழலையும் அழகுப்படுத்தும் நேரத்தையும் செலவினங்களையும் மாணவர்களின் கழிவறைக்கு ஒதுக்கினால் சிறப்பாக இருக்கும். ஒரு சில தமிழ்ப்பள்ளிகள் இதனை முன்கூட்டியே மிகவும் சிறப்பாகச் செய்துள்ளனர். மாற்றங்கள் செய்வதற்கு அவர்களின் உதவியை/அறிவுரையைக் கூட நாடலாம். மலம் ஜலம் அடக்கும் பிள்ளைகளுக்கு எம்மாதிரியான நோவுகள் ஏற்படும் என்பதைப் பட்டியலிட்டுப் பார்த்தால் முதலில் வீட்டிலும் பள்ளியிலும் உள்ள கழிவறைகளை மாற்றி அமைத்து விடுவோம். இப்பயிற்சியில் “Teach Your Kid How To Eat And Shit” என்பதை வலியுறுத்திக் கூறப்படுகின்றது. இது கூட பெற்றோர்களான எங்களுக்குத் தெரியதா? கழிவுகளை வெளியேற்ற திட்டமிட வேண்டுமா? என்ற வினாக்கள் உங்களுக்குள் எழும்பலாம். உங்கள் குழந்தை சிறந்த நிலையை அடைய வேண்டும் என்று நினைக்கும் நீங்கள் இதை முறையாகக் கடைப்பிடித்ததுண்டா? உங்களுக்குத் தெரியுமா மந்தமான மாணவர் பிறப்பதற்குக் காரணம் கர்ப்பக் காலத்தில் தாய்மார்கள் முறையாக மலம் கழிக்காமல் குடலில் அடக்கி வைப்பதால்தான் ஏற்படுகிறது என்பது. சிறுநீர் அடக்கினால் குழந்தை ஊமையாகவும் மலம் ஜலம் இவ்விரண்டையும் அடக்கினால் குருடாகவும் பிறக்கும் என்று 5,900 ஆண்டுகளுக்கு முன் திருமூலர் திருமந்திரத்தில் வகுத்துள்ளார். இவ்வாரே மந்தம், ஊமை, குருடு என பல குழந்தைகள் இத்தரணியில் பிறந்திருக்கின்றனர் என்பது வருத்ததிற்குரியது.
குடல் சுத்தம் உடல் சுத்தம் என்றார்கள் சித்தர்கள். ஆகவே, உடலைச் சுத்தமாக வைத்துக் கொள்வதற்கான பயிற்சி மிக அருமையான முறையில் வழங்கப்பட்டது. இப்பயிற்சியின் மூலமாக நம் பிள்ளைகள் அடையவிருக்கும் அபரிமிதமான வளர்ச்சிப்படிகளை அறிவியல் ஆதாரங்களுடன் விளக்கப்பட்டது. உங்களுக்குப் புரியும் வகையில் கூறுகிறேன். இக்காலக்கட்டத்தில் மகிழுந்து (கார்) இல்லாத வீடுகளை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவிற்குக் கார்களின் பங்கு/தேவை அதிகமாகவே உள்ளது. அதனாலேயே அதனை அக்கரையுடன் முறையாகப் பராமரிக்கிறோம். கார்களின் மிக முக்கியமான பகுதி இயந்திம். இயந்திரங்கள் செவ்வனே இயங்க குறித்த நேரத்தில் முறையான பராமரிப்புச் சேவை (on time car service) பெற வேண்டும். இயந்திரம் முறையாக இயங்க மசகு எண்ணெயை (lubricant) மாற்றியே ஆக வேண்டும். இல்லையெனில் அதன் இயக்கத்தில் கோளாறுகள் ஏற்பட்டுவிடும்.
ஒரு மனிதன் கண்டுபிடித்த உயிரற்ற பொருளின் நலனைக் காக்க கட்டாயம் செய்ய வேண்டியதைச் செய்கிறோம். ஏன் ஒரு மனிதனின் நலனைக் காக்க கட்டாயம் செய்ய வேண்டிய முறையான செயல்களைச் செய்யாமல் கண்டும் காணாதது போலவும் இருக்கிறோம்? குறிப்பாக கல்வி பயிலும் மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டுத் துறையிலும் ஒழுக்கத்திலும் சிறந்த நிலையை அடைய முடியாமல் அதாவது சிறந்த சேவையை வழங்க முடியாத காரைப் போல் அலை மோதுவது பெற்றோர்களான ………. ஆசிரியர்களான… உயர்பதவியில் இருக்கும் உயர்வெண்ணம் பொருந்திய உயரதிகாரிகளான உங்களுக்குத் தெரியவில்லையா?
தெரியவில்லை என்றால் அது முற்றிலும் நடிப்புதான்! உண்மையிலேயே தெரியவில்லையெனில், சற்றும் தாமதிக்காமல் சரியான நபரிடம் கேட்டுத் தெளிவு பெற்று உடனே செயல்படுத்துங்கள். காரணம் உயிரற்ற கார் பழுதானால் பழுது பார்த்து மீண்டும் பயன்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல் நம்மிடமுள்ள பணத்தைக் கொண்டு புதிய வாகனங்களை வாங்கிக் கொள்ளலாம். ஆனால், தவமாய் தவமிருந்து பெற்றெடுத்த குழந்தை பழுதடைந்தால் என்ன செய்வீர்கள்? அப்படி மாற்று வழி கண்டறிந்தால் தகுந்த ஆதாரங்களுடன் VGENIUST தலைமை பயிற்றுனரான ஐயா இளங்கோவன் அவர்களை வந்து சந்திக்கவும். மாற்றுவழி கிடக்குமா? இருக்கிறதா? சின்னப்புள்ளத்தனமாக சவால் விடுகிறேன் என்றெல்லாம் எண்ணி விடாதீர்கள். கிடைக்கப்பெறும் பதிலில்தான் உண்மை மறைந்திருக்கிறது.
இதையும் கேளுங்கள்! உங்கள் பிள்ளை விளையாட்டில் ஆர்வம் உள்ளவரா? உங்கள் பிள்ளை விளையாட்டில் சாதனை படைக்க நீங்கள் விரும்புகிறீர்களா? உங்கள் பிள்ளை வெள்ளை சீனி உண்பவரா? உலக/தேசிய நிலையில் பயிற்சி பெறும் விளையாட்டு வீரர்/வீரங்கனையின் உண்ணும் உணவில் உள்ள வெள்ளை சீனியின் அளவு 0% என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் பிள்ளை தேசிய விளையாட்டு வீரர்/வீராங்கனையாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? நாட்டிற்கு பெருமை சேர்ப்பவர்களுக்கு மட்டும்தான் இந்தச் சிறப்புச் சேவை வழங்கப்படுமா? ஏன்? என்ன நடக்கிறது? நாம் எவ்வாறு தயாராக வேண்டும்?
இது போன்ற சூழலைக் கடந்து நினத்ததைச் சாதிக்க வரம் பெற வேண்டும். சித்தர்கள், ஞானிகள், யோகிகள் அருளிய சாகாவரம் பெற்ற நுட்பங்களை வருட காலமாக தாமே சுயமாக ஆய்வை மேற்கொண்டு ஆக்ககரமான 7 இரகசியங்களை 7 நிமிடத்தில் செய்யும் முறைகளை நமக்குத் தொகுத்துப் பொக்கிஷமாக தமது 2 நாள் பயிற்சியில் சாதூரியமாக வழங்குகிறார் நமது பெருமைக்குரிய தலைமை பயிற்றுனர் ஐயா இளங்கோவன் தங்கவேலு அவர்கள். பயிற்சி பெறும் மாணவர்களின் வளர்ச்சி பயிற்றுனர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும் வருகிறது. பயிற்சிக்குப் பிறகு மேலும் விபரங்கள் பெற தொடர்ந்து பயிற்சியாளர்களைத் தொடர்புகொள்ள வாய்ப்பும் வழங்கப்படுகிறது. சிறந்த சேவையைத் தொடர்ந்து வழங்கி வரும் பயிற்றுனர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
இந்த பயிற்சியில் என் பிள்ளை கலந்து கொண்டால் தானியங்கி (automatic) முறையில் மாயாஜாலம்(magic) நடந்து என் பிள்ளை உருமாற்றம் பெற்றுச் சாதனை செய்து விடுவார்களா? என்ற எதிர்பார்ப்புடன் நீங்கள் கேட்கும் கேள்வி என் செவிகளில் கேட்கிறது. அவரவர் பசித் தீர அவரவர் தான் சாப்பிட வேண்டும். சரியான செயல்பாடுகளுடன் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் வெற்றி பெறும். சரியாக செயல்பட்டால் மட்டுமே வானம் வசப்படும் என்பது உங்களுக்கும் தெரியும். ஆகவே, கண்ணாமூச்சு விளையாட்டு வேண்டாம்…….விபரீதமாகிவிடும். இஃது எச்சரிக்கை அல்ல இயற்கையின் நீதி.
பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களும் கொடுத்து வைத்தவர்கள். Yes, they are gifted child. பயிற்சியில் கலந்து கொண்டமைக்குப் பரிசாக 7 இரகசியங்கள் வழங்கப்படுகிறது. Active brain, Mind resetting, Focus, Creative, Memory power, Single Rhythm, Alpha Thinking ஆகியவையே VGENIUST பயிற்சியின் வாயிலாக மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படும் 7 சிறப்புவாய்ந்த யுக்திகளாகும். ஒவ்வொன்றும் செய்முறைகளுடனும் மாணவர்கள் சுலபமாக புரிந்து கொள்ளும் வகையிலும் வழங்கப்படுகிறது. இவ்வுக்திகளை முறையாகத் தொடர்ந்து செய்வதால் உடலளவிலும் மனதளவிலும் ஏற்படும் பரிபூரண விஞ்ஞான மாற்றங்களும் விளக்கமாக அளிக்கப்படுகிறது. கலந்து கொண்ட மாணவர்களின் பயிற்சிக்கு முன்னும் பின்னும் எற்படும் மாற்றங்களைச் சரியான பரிசோதனையின் வழிக் கண்டறியலாம். (மருத்துவ பரிசோதனை குறிப்பு, மூளையின் சிந்தனை அலைவரிசையின் தரம் , சக்கரம் இயங்கும் சக்தி நிலை) மிகவும் துல்லியமாக உறுதிப்படுத்திவிடலாம்.
இந்த 7 யுக்திகளையும் முறையாகத் தொடர்ந்து செய்த மாணவர்களின் சிறப்பான மாற்றங்களைக் கண்முன்னே பார்த்திருக்கிறேன். The Prove Of Ability Is Result என்பார்கள். இப்பயிற்சியின் வாயிலாக என் மாணவர்களின் ஆற்றலின் (ability) வளர்ச்சியை அவர்களின் சிந்தனை மாற்றத்திலும் சோதனை முடிவிலும் ( result) தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. அஃது அபரிமிதமான உருமாற்றம்.
அறிவார்ந்த குழந்தைகளை ஈன்றெடுத்த நம் பாட்டன் பாட்டி, பூட்டன் பூட்டி, ஓட்டன் ஓட்டி, சேயோன் சேயோள், பரன் பரை கூறும் அறிவியல் இரகசியத்தை உங்களுக்குக் கூறுகிறேன் கேளுங்கள். ஒட்டுமொத்த குழந்தைகளின் துவக்கமும் வளர்ச்சியும் பயணமும் தொடங்கக்கூடிய நிலை ஆண் பெண் / தம்பதியரின் / பெற்றோரின் புனிதமான உடலுறவில்தான் என்பது அசைக்க முடியாத கருத்து. இதனைத் துல்லிதமாகக் கண்டறியும் அனைத்துக் கருவிகளும் VGENIUST-இடம் இருக்கிறது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
பிள்ளைகளின் ஆரோக்கியம், குணநலன்கள், கற்றல் ஆற்றல், எல்லா வகையான நேர்மறையான எதிர்மறையான செயலுக்கும் 100% சதவீதம் பெற்றோர்களே காரணம். அவர்களே இதற்கு முழுப் பொறுப்பு. பிள்ளைகளின் தொழில், பெயர், புகழ், பணம் போன்ற பகுதிகளில் முழுமையாகவும் முறையாகவும் நடந்து கொள்ள முடியவில்லையே! இதற்குக் காரணமும் பெற்றோர்களே! அனைத்திற்கும் ஆதாரங்கள் உண்டு.
“என்ன சொல்கிறீர்கள் நீங்கள்? 10 மாதம் சுமந்து பெற்றெடுத்த நாங்கள் எப்படி இதற்குப் பொறுப்பாக முடியும்? பெற்றெடுத்த குழந்தைகளுக்கு நாங்களே தீங்கு நினைப்போமா? எங்கள் குழந்தை எங்கள் உயிர்,” என்றெல்லாம் நீங்கள் புலம்பலாம்………….ஆனால், உண்மை இதுதான். தயைக்கூர்ந்து தாய்மைக் கலந்த கருணை உள்ளத்துடன் அடுத்து வரும் வரிகளைப் படித்து / கேட்டு உய்த்துணருங்கள். பெற்றோர்கள் தத்தம் தங்களின் குற்றங்களை ஒப்புக்கொள்ளாமல் இருப்பது ஒவ்வாமைக்கு (allergic) ஒப்பாகும்.
உலகறிய…… ”எங்களால் இயன்ற அனைத்தையுமே எங்கள் பிள்ளைகளுக்குச் செய்து விட்டோம்! இனி செய்வதற்கு ஒன்றுமே இல்லை. இதற்கு மேல் பிள்ளைகளின் பொறுப்பு.….அப்பாடா..!” என்று கூறி பெருமூச்சு விடும் பெற்றோர்கள் OSCAR விருது பெற்ற மிகப் பெரிய நடிகர்கள்தான்.உங்களுக்கு எங்களின் வாழ்த்துகள்!
கருத்தரிக்கும் நேரம், இடம், குழந்தை பிரசவிக்கும் இடம், சூழ்நிலை, 9 மாதங்கள் சுமக்கும் போது பெற்றோர்கள் செய்யும் அனைத்துச் செயல்களும், குழந்தை பிறந்த பிறகு புறச் சிந்தனையில் யோசிப்பதற்கு முன்பு, மனிதன் இயற்றிய மொழியில் பேசுவதற்கு முன்பு 100 ஆண்டு கால வாழ்க்கையை அனுபவிக்கக் கூடிய வாழ்க்கையின் விதையை விதியாக 100% செய்து குழந்தைகளுக்குப் பொக்கிஷமாக வழங்கும் வரம் பெற்றவர்கள் பெற்றோர்களே! இந்தத் தெளிவு/கருத்து அறியாமல் இருந்தாலும் அறிந்தும் செயல்படுத்தாமல் இருந்தாலும் முழுப் பொறுப்பாளி பெற்றோர்களே! பெர்றோர்களே! பெற்றோர்களே!
குழந்தைகள் சாதிக்க, பண்பாளனாக இருக்க, நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக இருக்க, சகல செல்வங்களோடு இருக்க, பேரும் புகழுடனும் நிலைத்திருக்க வேண்டும் என்று மனதார நினைக்கிறீர்களா / எதிர்பார்க்கிறீர்களா / கனவு காண்கிறீர்களா / விரும்புகிறீர்ளா / ஏங்குகிறீர்களா? தாராளாமாக செய்யுங்கள் உங்கள் குழந்தை உங்கள் பொறுப்பு. ஆனால், என்ன நடக்க வேண்டுமென கருதுகிறீர்களோ அதனை அடைய நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். பெற்றோர்களின் திருந்திய செயல் உணர்வாலும் , அறிவாலும் செயலாலும் உருமாற்றம் செய்து செயல்பட வேண்டும். இதுவே இயற்கையின் நீதி.
சிறந்த பெற்றோர்களைப் பெற்றிருக்கும் பிள்ளைகளின் சவால்கள் ஒரு புறம் இருக்க, பொறுப்பற்ற பெற்றோர்கள், கடமைகளைத் தவற விட்ட பெற்றோர்கள், உடல்நலப் பிரச்சனைக்களுக்குள்ளானவர்கள், பொருளாதார பிரச்சனைக்குள்ளானோர், கல்வியில் பின் தங்கியவர்கள், பிரச்சனையான குடும்ப உறுப்பினர்கள், போதைப் பித்தர்கள், மதுபானத்திற்கு அடிமையானவர்கள் போன்ற பலதரப்பட்ட பெற்றோர்களின் குழந்தைகளுக்கு யார் பொறுப்பேற்பது? இவர்களின் குழந்தைகளின் வளர்ச்சியை யார் உறுதிப்படுத்துவது?
இதற்கு ஓர் உதாரணம் கூறுகிறேன் கேளுங்கள்! வீட்டில் சிகிச்சைப் பெற்றுப் பயனளிக்காத ஒரு நோயாளி நோயிலிருந்து விடுபெறுவதற்கு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். இந்தக் கட்டளையை நமக்கு வழங்கியவர்கள் நம்மீது அக்கரையும் பொறுப்பும் உள்ள நமது அரசாங்கம் தான். அது போல கல்வியில் பெற்றோர்களால் முழுமையாக வழிநடத்த இயலாத மாணவர்கள் அவர்களுக்கு வேண்டிய அறிவுநிலையை அடைவதற்குச் செல்ல வேண்டிய தளம் பள்ளிக்கூடம்.
ஒரு குழந்தையின் மிகச்சிறந்த வளர்ச்சியைப் பெற்றோர்கள் மட்டுமே உருவாக்க வேண்டும் என்றால் பள்ளிக்கூடத்தின் பொறுப்பு என்னவாயிற்று? பள்ளிக்கூடத்திற்கு வரும் அனைத்து மாணவர்களும் உருமாற்றம் பெற்றுவிடுகின்றனரா? அதற்கு 100% ஆதாரங்களைக் காட்ட தயாராக இருக்கிறீர்களா? அப்படி இல்லை என்றால் பள்ளிக்கூடங்கள் தேவையில்லை தானே! நாட்டில் விரல் விட்டு என்னக்கூடிய அளவில் தான் தமிழ்ப்பள்ளிகள் இருக்கின்றன. நோக்கத்திற்கு ஏற்ப முழுமையாக இயங்காத பள்ளிகளை மூடி விடலாமா? நோக்கம் நிறைவேறாத பட்சத்தில்………..தளங்கள் மட்டும் இருந்து என்ன பயன்?
“தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு“ என்ற வீண் கூச்சல் எதற்கு?
100% இந்தியர்களில் எத்தனை விழுக்காட்டினர் தமிழிப்பள்ளிகளுக்குப் பிள்ளைகளை அனுப்புகின்றனர்? பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புங்கள். காரணம், தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு என்று முழக்கமிட்டு, அணித்திரண்டு போர்கொடியேந்தும் தரப்பினற்கு ஓர் அன்பான வேண்டுகோள். வியர்வைச் சிந்தி மாணவர்களைத் திரட்டும் பணியில் ஈடுபடும் நேரத்தைத் தமிழிப்பள்ளியின் தரத்தை உயர்த்துவதற்கு முழுமையாகவும் ஆக்ககரமாகவும் பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும். உங்களுக்குத் தெரியுமா? இனிப்பைத் தேடி வரும் எறும்பிற்கு யாரும் அழைப்பிதழ் கொடுத்ததில்லை. தேனிருக்கும் பூவின் முகவரியைக் கண்டறிவதற்கு தேனிக்கு யாரும் அறிக்கை அனுப்பியதில்லை.
தேனிருக்கும் பூவின் முகவரி தேனீக்குத் தெரியும்
அவர்களில் எத்தனை விழுக்காட்டினர் கல்விகற்றவர்களின் பிள்ளைகள்? எத்தனை பிள்ளைகள் சிறந்த பொருளாதார பின்னணியைக் கொண்டவர்கள்? எத்தனை விழுக்காட்டினர் சிறந்த குடும்ப பின்னணியைக் கொண்டவர்களின் பிள்ளைகள்? எத்தனை விழுக்காட்டினர் ஆரோக்கியமற்ற குடும்ப பின்னணியைக் கொண்டவர்கள்? எத்தனை % மாணவர்கள் போதைக்கு அடிமையானவர்களின் பெற்றோர்களைக் கொண்டிருக்கின்றனர்? எத்தனை % மாணவர்கள் வறுமை நிலையில் உள்ளனர்? இன்னும் எத்தனை % மாணவர்கள் கண்ணுக்குத் தெரியாத சவால்களைக் கொண்டிருக்கின்றனர்?
இப்படிப் பதரப்பட்ட சூழலில் இருந்து வரும் பிள்ளைகளின் நிலைகளும் பலவாராகத்தானே இருக்கும். அவர்களின் செயல் முறைகள் வித்தியாசமாகத்தானே இருக்கும். அப்படியென்றால், அவர்கள் அவரவர் நிலையில்தானே இருப்பர்.
மாணவர்களின் நிலை பலவாராக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
உங்கள் பிள்ளைகளின்/மாணவர்களின் நிலை என்ன?
மாணவர்களின் கல்வி நிலை
A% = Good in study straight As கல்வியில் மிகச்சிறந்த நிலை
B% = Good in study all subjects scoring well எல்லாப் பாடங்களிலும் சிறந்த தேர்ச்சி பெற்றவர்கள்
C% = Overall Good in study கல்வியில் ஒட்டு மொத்த சிறந்த நிலை
D% = Fail few subjects and pass few subjects, ஒரு சில பாடங்களில் சிறப்புத் தேர்ச்சியும் ஒரு சில பாடங்களில் பின்னடைவு
E% = fail at border all subjects பாடங்களில் பின்னடைவு
F% = fail lower marks குறைந்த புள்ளிகளில் பின்னடைவு
G% = fail very lower marks மிக மோசமான நிலையில் பின்னடைவு
H% = fail, can’t read, write, talk good language command power not build properly முறையாக பேச, வாசிக்க, எழுத தெரியாத நிலை
GREATNESS/மாணவர்களின் சிறப்புத்தன்மை
G1% = Helpful உதவும் மனப்பான்மை
G2% = Just focus own task சுய வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துதல்
G3% = Always Feedback கருத்துகளைப் பகிர்தல்
G4% = Silent அமைதி
G5% = Ask help if needed உதவியை நாடுதல்
DISCIPLINE ISSUE LIST/மாணவர்களின் கட்டொழுங்கு பிரச்சனை
D1% = Very great attitude சாலச் சிறந்த ஒழுக்கம்
D2% = Great attitude சிறந்த ஒழுக்கம்
D3% = Overall generally good attitude நல்ல ஒழுக்கம்
D4% = Non respect attitude to children peer friends நண்பர்கள் மத்தியில் மதிப்பு இல்லாமை
D5% = Non respect attitude to teachers ஆசிரியர்கள் மத்தியில் மதிப்பு இல்லாமை
D6% = Non respect attitude to children peer friends and teachers நண்பர்கள் ஆசிரியர்கள் மத்தியில் மதிப்பு இல்லாமை
D7% = Shouting அலறல்/சண்டை
D8% = Breaking properties பொருள் சிதைவு
D9% = Scratch walls சுவரைக் கிருக்குதல்
D10% = Stealing திருட்டு
HEALTH ISSUE CHILDREN/மாணவர்களின் ஆரோக்கியம்
H1% = Asthma சுவாசப் பிரச்சனை
H2% = Digestion ஜீரணச்சக்தி
H3% = Skins தோல்
H4% = Flu, sinus cough issue சலி/தும்மல்/இருமல்
H5% = Other health challenge இதர ஆரோக்கிய பிரச்சனை
பள்ளிக்கூடத்திற்கு வரும் மாணவர்களில் எத்தனை % மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குகின்றனர்? மாணவர்கள் சிறந்து விளங்க பள்ளிக்கூடம் உறுதுணையாக இருக்கின்றதா?
என் அன்பார்ந்த பெற்றோர்களே,
பல சவால்களுக்கிடையில் பிள்ளைச் செல்வத்தைப் பெற்று வாழும் பெற்றோர்களே உங்கள் சிந்தனையில் மாற்றம் பெறுவதற்காகவே பல உண்மை தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். நிச்சயமாக உங்களைத் தாழ்த்திப் பேசுவதற்கு அல்ல. நிறைந்த செல்வத்துடன் இவ்வுலகில் வாழ நமக்கு எல்லாத் தகுதிகளும் உரிமைகளும் உண்டு. நமக்குக் கிடைத்தவற்றைக் கொண்டு நாம் சிறந்ததொரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதற்காக, அனைத்திற்கும் நன்றி! நன்றி! நன்றி!
நாம் கடந்த சவால்களைப் பிள்ளைகளும் கடந்து வரட்டும் என்று நினக்கும் ஒரு சராசரி பெற்றோர் போல் அல்லாமல். இவ்வுலகில் காற்றுப் போல சூழ்ந்துள்ள அனைத்துச் சூழல்களையும் சாணக்கியதனமாக கடந்து இன்புற்று நீண்ட ஆயுளுடன் நினைத்த வெற்றி வாழ்க்கை வாழ்ந்து பிறந்த பயனை அடைய நம் பிள்ளைகளை ஒருமித்த கருத்துடன் தயார் செய்வோம். இந்த அழகான உலகில் பயணிக்க தேவையானவை என்னவென்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற நமக்குத் தெரியும். தெரிந்து கொண்டதோடு நிறுத்தி விடாமல் துணிச்சலாக முடிவு செய்ய வேண்டும். காரணம் ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் நம் வாழ்க்கை வளமாகும். மேலும், சிந்தனையே விதியின் விதை. எனவே, சிறந்த சிந்தனையை விதையாக விதைத்து நல்ல விதியை வாழ்க்கையாகக் கொள்வோம்.
ஆகவே, VGENIUST பயிற்சியில் முழுமையாக கலந்து கொண்டு வழங்கப்படும் யுக்திகளை முறையாக செய்யும் மாணவர்கள் உறுதியாக உருமாற்றம் பெற்று ஆரோக்கியத்திலும் ஒழுக்கத்திலும் கல்வியிலும் விளையாட்டுத் துறையிலும் 100% சிறந்த நிலையை அடைவர் என்று ஒரு பெற்றோராகவும் ஆசிரியராகவும் உறுதி கூறி உத்தரவாதம் வழங்குகிறேன்.
அனைத்து அன்பார்ந்த பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இத்திருக்குறளை உங்களின் சிந்தனைக்கு விருந்தாக சமர்ப்பிக்கிறேன்.
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது. ( குறள் 68)
அதாவது……….
Click TA language at top Flag & Language Menu to view full articles
Tags: sekolah, sk, tamil school
For more information, please Click HereAdded on : 15/11/2020 1:27 PM
Added on : 02/01/2021 11:34 PM
Added on : 19/01/2025 3:06 PM
Added on : 08/01/2021 12:27 PM
Added on : 12/06/2021 8:40 AM
Added on : 16/11/2021 10:51 PM
Added on : 19/01/2025 3:06 PM
Added on : 13/08/2024 10:24 PM
Added on : 11/08/2024 12:57 AM